கவிஞர் சிற்பியின் 90வது ஆண்டு பிறந்தநாள் நிறைவு விழா பொள்ளாச்சியில் நடைபெற்றது. விழாவை முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமி தொடங்கி வைத்தார்.

கவிதையைக் கொண்டாடுவோம் என்ற அமர்வில் கவிச்சுடர் கவிதைப் பித்தன் பேசினார். கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, கவிஞர் தங்கம் மூர்த்தி, கவிஞர் தஞ்சை இனியன், கவிஞர் சக்தி ஜோதி ஆகியோர் சிற்பியின் சிறப்புகள் குறித்த கவிதைகளை வழங்கினர்.

மாசாணி அம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆர்.கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

கவிஞர் சிற்பி குறித்து ஒரு கிராமத்து நதி என்னும் தலைப்பில் கவிஞர் சோலைமாயவன், கவிஞர் பூபாலன் ஆகியோர் இயற்றிய குறும்படமும், நதியின் பயணத்தில் என்னும் தலைப்பில் கிருங்கை சேதுபதி, அருணன், கபிலன் ஆகியோர் இயற்றிய குறும்படமும் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாள் நிகழ்வாக புதிய நூல்கள் வெளியீடு, கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.