கற்பகம் தொழில்நுட்பக் கல்லூரியின் 14 மற்றும் 15 ஆவது பட்டமளிப்பு விழா 29.03.2025 அன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. 2019 – 2023 மற்றும் 2020 – 2024 கல்வியாண்டுகளில் பயின்ற 418 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
விழாவில், கற்பகம் கல்விக் குழுமத்தின் தலைவர் வசந்தகுமார் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் மணிமாறன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக மிஸ்டர் கூப்பர் பல்துறை நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மோகன்பாபு பாலசந்திரன் கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார். மாணவர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயில வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
விழாவில் கல்விக் குழுமத்தின் அறங்காவலர்கள், முதன்மைச் செயல் அலுவலர், பேராசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.