நிர்மலா மகளிர் கல்லூரி, நல்லாயன் அறக்கட்டளை சார்பில் கண்ணதாசன் நினைவு நாள் விழா சிறப்புச் சொற்பொழிவு‌ நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சென்னை, கண்ணதாசன் கலைக்கூடத்தின் நிறுவனரும், கவிஞரும், எழுத்தாளருமான காவிரி மைந்தன் கலந்துகொண்டு, கண்ணதாசன் அனுபவ படைப்புகளை, வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிக் கூறினார்.

பாடல் போட்டி, ஒப்புவித்தல் போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

விழாவில் கல்லூரியின் செயலர் குழந்தை தெரேஸ், கல்லூரி முதல்வர் மேரி பபியோலா, தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட ஆளுநர் அரிமா மாவட்டம் ஜான் பீட்டர், கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் சிங்கை முத்து, பேராசிரியர்கள். மாணவிகள் கலந்துகொண்டனர்.