ஜூன் 16 முதல் 20 வரை தைவான் தலைநகரான தைபெயில் நடந்த சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டியில், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.
ஆக்டோபஸ் உயிரினங்களின் இயற்கை இயக்கங்களை பின்பற்றி வடிவமைக்கப்பட்ட “O-BOT” எனும் இந்த பயோமிமெடிக் அறுவை சிகிச்சை ரோபோவை உருவாக்கிய மாணவர் குழுவில், லேகா பத்மநாபன், திலோத்தம்மா, ஹரிஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்த ரோபோ ஆக்டோபஸ் அங்கங்களைப் போன்ற நெகிழ்வான இயக்கத் திறன் கொண்டது. இது ஒரு நெகிழ்வான, ஆறு சுதந்திர இயக்க அச்சுகள், வலுவாக சரிசெய்யக்கூடிய பிடிமானம் மற்றும் அணியக்கூடிய சைகை கண்காணிப்பு கட்டுப்படுத்தி வழியாக உள்ளுணர்வு கண்ணாடி-இயக்கக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்த ரோபோ, கலைஞர் கருணாநிதி கல்லூரி வளாகத்திலுள்ள ஐஐடி பம்பாயின் கீழ் செயல்படும் ஈ-யந்திரா ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது.
மாணவர் குழுவினரை, நிறுவன தலைவர் பொங்கலூர் பழனிசாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன் தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்லூரி துணை முதல்வர் மைதிலி வாழ்த்தினர்.
