அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான போர் விரைவில் முடியும் என்றும் ஈரானின் மீது குறி வைக்க வேறு எதுவும் இல்லை என்றும் கூறியிருப்பதால் உலக நாடுகள் மத்தியில் நம்பிக்கை பிறந்துள்ளது.

ஈரான் மீது குறிவைக்க இங்கும் அங்கும் சில இடங்களே உள்ளன, அதை விரைவில் முடித்து இந்த போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அவர் கூறியிருக்கிறார். நான் எப்போது விரும்புகிறேனோ அப்போது போர் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த ஐந்து நிமிட தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் கூறியிருக்கிறார்.

அதே சமயம் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த போர் முடிவுக்கு கொண்டு வர கால நிர்ணயம் எதுவும் செய்யப்படவில்லை, முழுமையாக எங்களுடைய குறிக்கோள்கள் வெற்றி பெற்ற பின்னரே இது முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று கூறியிருக்கிறார்.

தற்போது வெளிவரக்கூடிய தகவலின் படி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் குறைந்தது இரண்டு வாரத்திற்கான தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தெரிய வருகிறது.