கோவை சத்தி சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் சரவணம்பட்டி சந்திப்பு பகுதியில் 1.4 கிலோமீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டப்படும் என 4-5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கோவை சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்தது. இது 2 அடுக்கு மேம்பாலமாக அமைக்க ஆலோசிக்கப்பட்டது. மேலடுக்கில் மெட்ரோ, கீழடுக்கில் வழக்கமான வாகனப்போக்குவரத்து ஆலோசிக்கப்பட்டது.
இருந்த போதிலும், திட்டம் துவங்குவதுபோல அறிகுறிகள் இல்லாத நிலையே தொடர்ந்தது. இந்த நிலையில்,சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டும் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேம்பாலத்திற்கு பதில் சாலை விரிவாக்கம், சரவணம்பட்டி சந்திப்பு மேம்படுத்துதல் ஆகியவற்றை ரூ.13 கோடியில் நிகழ்த்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.
மிக விரைவில் தேசிய நெடுஞ்சாலை 948ன், 329 கிலோமீட்டர் நீள பகுதியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையிலெடுக்க உள்ளதால், அதன் கீழ் வரும் இப்பகுதியில் மேம்பாலம் கட்டலாமா என்பதை ஆணையம் தீர்மானிக்கும்.
