கோவை மாநகரை பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே அதிகாலையில் குளிரும், மதியம் சற்று வெயிலும், இரவு லேசான குளிரும் நிலவுகிறது.

பிப்ரவரி வந்தாலே, கோடை பின்னாடியே வந்துவிடும் என்பார்கள். இந்த நிலையில் வரக்கூடிய சில நாட்கள் கோவை மாநகரில் வானிலை எப்படி இருக்க வாய்ப்புள்ளது என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு, அவர் நாம் இப்போது கோடையின் முன்கூட்டிய காலத்தில் இருக்கிறோம் என கூறினார்.

இந்த வாரத்தில், காலை சற்று சௌகரியமாக வானிலை இருக்கும். அதுவே மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் 32-33° செல்ஸியஸ் வரை கூட போகும். இதனால் வெப்பம் இருப்பதாக உணார்வோம். அதுவே அடுத்த வாரத்தில் பிப்.22-28 ஆகிய நாட்களில் 1-2 டிகிரி (34-35) வரை வெப்பம் உயர வாய்ப்புள்ளது என அவர் கூறினார்.