ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனமானது தனது புதியதாக அறிமுகப்படுத்திய நலவாழ்வு திட்டங்களை பற்றின செய்தியாளர் சந்திப்பு நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நிகழ்வில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் ஜெயின் பங்கேற்று நிறுவனத்தின் புதுமையான சூப்பர் ஸ்டார் காப்பீடு மற்றும் ஸ்டார் ஆரோக்ய டிஜி சேவா குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில், தமிழ்நாடு எக்ஸிகியூடிவ் பிரசிடெண்ட் மற்றும் ரீஜனல் ஹெட் பாலாஜி பாபு மற்றும் கோயம்புத்தூர் மண்டல ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளர்கள் பலர் பங்கேற்றனர்.