கோவில்பாளையம் ரத்தினம் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு எம்பிஏ துறை மாணவர்கள் சார்பில், “சர்வதேச வணிக கண்காட்சி 2024” நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) இணை இயக்குநர் ஜெனரல் உன்னிகிருஷ்ணன் கலந்து கொண்டு இக்கண்காட்சியைத் திறந்து வைத்தார். அவர் தனது உரையில், இந்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன என்பதை எடுத்துரைத்தார்.

rcas 2 1

தற்போது உலகளாவிய இறக்குமதியில் 70% உள்ள தொழில்நுட்பம் தொடர்பான தயாரிப்புகள், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிற்கு 300 பில்லியின் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படும். இ-காமர்ஸ்  ஏற்றுமதிகளில் கவனம் செலுத்துவதற்கு மேலாண்மைத் துறை மாணவர்கள் தங்கள் சொந்த எஸ்எம்இ முயற்சிகளைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தினார்.

வெளிநாட்டு சந்தைகளைப் பற்றி ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கவும், வருங்காலத்தில் தங்கள் சொந்த ஏற்றுமதி முயற்சிகளுக்கு உத்வேகம் பெறும் நோக்கில் இக்கண்காட்சி அமைந்தது.

ஜப்பான், சீனா, தென் கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்டால்கள் இந்த கண்காட்சியில் நிறுவப்பட்டன

இதில், ரத்தினம் கோவில்பாளையம் வளாகத் தலைவர் குணசேகரன், டீன் செந்தில்வேல்குமார், மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.