ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவ சமுதாயம்தான் நாளைய சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மாணவிகள் கல்வி, ஆராய்ச்சி, கலை மற்றும் சமூக சேவையில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாழ்வியல் மதிப்புகளோடு, மாற்றங்களுக்கேற்பத் தங்களை தகவமைத்துக் கொள்ளுதல் மற்றும் உலகளாவிய சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
சிறப்பு விருந்தினர் மேடைப்பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில்: கல்லூரி வாழ்க்கையைத் தனிப்பட்ட வளர்ச்சிக்கான தொடக்கப்பாதையாக மாணவர்கள் பார்க்க வேண்டும். மனப்பாடம் செய்வதை விட ஆர்வம், இரக்கம் மற்றும் மற்றவர்களுடனான ஒத்துழைப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று பேசினார்.
முன்னதாகக் கல்லூரியின் துணை முதல்வர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றுக் கல்லூரியின் சிறப்புகளை எடுத்துரைத்தார். கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.