ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு சிறந்த மருத்துவ மையம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த யு.எஸ்.ஏ சர்ஜிகல் ரிவியூ கார்ப்பரேஷன் (எஸ்.ஆர்.சி) வழங்கிய  அங்கீகாரத்தைப் பெறும் இந்தியாவின் முதல் மருத்துவமனை இதுவாகும்.

இதுகுறித்து ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.மாதேஸ்வரன் கூறுகையில், ‘அனைத்து நோயாளிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட  தரமான சிகிச்சையை ராயல் கேர் மருத்துவமனை வழங்கி வருவதோடு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்கு சான்றாகப் பல அங்கீகாரங்களை மருத்துவமனை பெற்றுள்ளது. தற்போது, நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனையாக எஸ்.ஆர்.சி அங்கீகரித்துள்ளது. விபத்து, தலை காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு உள்ளிட்ட பிரச்னைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுபவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை தொடங்கி, சி.டி ஸ்கேன், அறுவை சிகிச்சை வரை அனைத்து மருத்துவ சேவைகளை துரிதப்படுத்துவது போன்ற தரநிலை அடிப்படையில் இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ராயல் கேர் மருத்துவமனைக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அங்கீகாரம் நரம்பியல் அறுவை சிகிச்சையில் துறையில் மிகச் சிறந்த மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவையை வழங்கி வருகிறது என்பதை குறிக்கிறதுֹ’ என்றார்.

இம்மருத்துவமனையின் தலைவரும் மற்றும் நரம்பியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்.மாதேஸ்வரன், நரம்பியல் அறுவை சிகிச்சையில் முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணராக அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்.ரகுராஜ பிரகாஷ் மற்றும் டாக்டர். செந்தில்குமார் ஆகியோர் நரம்பியல் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளனர்.