கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் தமிழ் மதுரம் இலக்கிய அமைப்பின் பொதுச்செயலாளர் மகேஸ்வரி சற்குரு கலந்துகொண்டார். கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், என்.சி.சி.,யில் வெற்றி கண்ட சாதனையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்லூரி முதல்வர் கீதா, செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.