இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் படைப்பிற்கு, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் புதுமை மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுத்  திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

ரசாயன பொறியியல் துறையின் உதவி பேராசிரியர் சதீஷ், இறுதி ஆண்டு மாணவர்களான கோபிகிருஷ்ணன், அனூப் மற்றும் ஃபத்ல் ஃபைசல் முகம்மது ஆகியோர் உதவி தொகை பெற்றுள்ளனர்.

இலைகளிலிருந்து மக்கும் பிளாஸ்டிக் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தத் தயாரிப்பு, எளிதில் அழியக்கூடிய மற்றும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் பயோ-பிளாஸ்டிக் தயாரிப்பை மையமாகக் கொண்டுள்ளது. இந்த பயோ-பிளாஸ்டிக் வாழைப்பழ தோல், பப்பாளிதோல்  மற்றும் மரவள்ளி கிழங்கு இலை ஆகியவை மூலப்பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கல்லூரி செயலாளர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா, முதல்வர் ஜெயா மற்றும் ரசாயன பொறியியல் துறைத் தலைவர் பழனி ஆகியோர் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.