பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்து ஆகஸ்ட் 1ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இது குறித்த  செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் நடிகர்கள் உதயா, அஜ்மல், நடிகை ஜான்விகா உள்ளிட்டோர் பேசினர். ஆக்‌ஷன்- ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் அக்யூஸ்ட் திரைப்படம் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் எனவும், இந்தப் படத்தில் நடிகர் உதயாவின் கடுமையான உழைப்பைப் பார்க்க முடியும் என இயக்குனர் தெரிவித்தார். குறிப்பாக யோகி பாபு சூப்பர் ஸ்டார்  ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது உதயாவிற்காக கால்ஷீட் ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவித்தார்.

இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் மிக  முக்கியம் எனவும், அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படங்களுக்கு கன்டென்ட் முக்கிய காரணம் என தெரிவித்தனர். அந்த வகையில் அக்யூஸ்ட் படத்தில் நல்ல ஒரு கண்டென்ட் இருப்பதாகவும், இது திரை ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.