கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44-வது பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில், டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்கள் தடகள அணி தொடர்ந்து 7-வது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இப்போட்டியில் 120 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பெற்றது. 8 தங்கப் பதக்கங்கள், 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வித் துறையினரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் பாராட்டினர்.