பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கண்டுபிடிப்பாளர் விருதுக்கான ஐடியா ஸ்பியர் 2024 ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது.

நிகழ்விற்கு பார்க் கல்வி குழுமம் முதன்மை செயல் அதிகாரி அனுஷா ரவி தலைமை வகித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக பெங்களூரு கே.வி.எம் மெட்டெக் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் வைஷ்ணவி கிருஷ்ணன், கோயம்புத்தூர் ஸ்கோமோட் தலைவர் செல்வக்குமார் ஆறுமுகம் கலந்து கொண்டனர்.

போட்டியில் வெற்றி பெற்ற பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மற்றும்  டாக்டர். என்.ஜி.பி. இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி ஆகிய மூன்று அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள்   வழங்கப்பட்டன.

இதில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் லட்சுமணன், வேலை வாய்ப்புகள் இயக்குநர் பிரின்ஸ், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இப்போட்டியில் சுமார் 220 அணிகள் பங்கு பெற்றன.