இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளியில் 11வது விளையாட்டு விழா நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அதிகாரி நந்தகுமார் துவக்கி வைத்தார்.
தடை ஓட்டம், தொடரோட்டம், நின்று தாண்டுதல், தட்டு எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பதக்கங்கள் வழங்கப்பட்டது.

தனிநபர் சாம்பியன் பட்டத்தை மாணவர்கள் பிரிவில் இலன்வர்க், மாணவிகள் பிரிவில் சாய்ஜெய்னி பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிவப்புநிற அணியும், இரண்டாமிடத்தை பச்சைநிற அணியும் பெற்றனர்.
பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா, நிர்வாக இயக்குனர் சதீஷ்பிரபு, டிரஸ்டி யமுனா சக்திவேல் ஆகியோர் வெற்றி பெற்ற குழந்தைளுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளியின் முதல்வர் சுஜா, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


