பிப்ரவரியில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா யோக போட்டியில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி கீத்திகா, தமிழக அணி சார்பாக பங்கேற்கவுள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற தென் மாநிலங்களுக்கு இடையேயான தனிநபர் யோகா போட்டியில் மாணவி  6ம் இடத்தைப் பிடித்தார். இப்போட்டியில் தமிழக அணி, குழுபோட்டியில் பங்கேற்று 4ம் இடத்தைப் பிடித்தது. வரும் பிப்ரவரியில் புதுடில்லியில் நடைபெறும் கேலோ இந்தியா யோகா போட்டியில் தமிழக அணிசார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து  கல்லூரி செயலாளர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா கூறுகையில்: மாணவி கீத்திகாவுக்கு விளையாட்டுப் பிரிவின் கீழ் அவர் விரும்பிய பி.எஸ்சி ஐ.டி துறையில் சீட் வழங்கப்பட்டது. அவருக்கு கல்லூரி பருவகட்டணம் சலுகை வழங்கி வருகிறோம். கடந்த இரணடு ஆண்டுகளாக அகில இந்திய பல்கலைக்கழக அளவில் பங்கேற்கும் போட்டிகளுக்கு ஆகும் செலவுகளை கல்லூரியே ஏற்றுக் கொண்டது.

பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வரும் கல்வியாண்டில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களில் விரும்பும் பாடப்பிரிவில் விளையாட்டுப்பிரிவில் சீட் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்  என்றார்கள்.