இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27வது விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர்ஓட்டம் போன்ற பல தடகளப் போட்டிகளும், வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட், எறிபந்து,கபடி,டேபில் டென்னிஸ், சதுரங்கம், கேரம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றன.

இவ்விழாவில் கோவை நகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,  ‘நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், விளையாட்டு விழா என்பது மாணவர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை வழங்கக்கூடியது.  விளையாட்டில் தன்னை இணைத்துக் கொண்டு தனது விளையாட்டு திறமையையும்,  விளையாட்டு சார்ந்த தனித்திறமையையும் வெளிப்படுத்தவும்,  கல்லூரியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1 57

மாணவர்கள் குறிப்பாக முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  யார் ஒருவர் குறிப்பிட்ட நேரங்களில் முடிவுகளைச் சரியாக எடுக்க கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவர் ‘  என்று பேசினார்.

மேலும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும் வழங்கினார்.  இவ்விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா, முதல்வர்  பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக உடற்கல்வி இயக்குநர் கருணாநிதி நன்றியுரையாற்றினார்;.