இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ‘மிக்ஸ் அண்ட் சோக்’ என்ற பாரம்பரிய கேக் மிக்சிங் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

4 14

இதில் சிறப்பு விருந்தினராக மெர்லிஸ் ஹோட்டலின் பொது மேலாளர் மதுசூதனன் சுகுமாரன், கௌரவ விருந்தினராக இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

2 22 scaled

கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர் பிரேம்கண்ணா, துறை ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். மாணவர்கள் சாண்டா தொப்பி அணிந்து, 15 கிலோ பழக் கலவையை தயாரித்தனர்.

6 6