சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கைத்தறி நெசவுத் துணி ஆடை அணிவகுப்பு நடைபெற்றது. கல்லூரித் தலைவர் லக்ஷ்மி நாராயணசாமி, முதல்வர் ராஜ்குமார், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கோவை ஐடியா மேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேமா, கீர்த்திகா நடுவர்களாகப் பங்கேற்றனர். மக்கள் சேவை மையம் இணைந்து செயல்பட்டது. நிகழ்ச்சியில் கைத்தறி துணிகளால் உருவாக்கப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாடல்கள் மேடையில் அணிவகுத்து கைத்தறி துணிக் கலையின் தனித்துவத்தை வெளிப்படுத்தினர்
