ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோயம்புத்தூர் மண்டல அறிவியல் மையத்தின் புத்தாக்க மைய ஆலோசகர் லெனின் பாரதி மற்றும் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அதிகாரி ஜெகநாதன் ஆகியோர் மாணவர்களின் மாதிரிகளை மதிப்பீடு செய்தனர்.

கல்லூரி முதல்வர் சித்ரா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, தற்போதைய சூழலில் மாணவர்கள் பலவகைத் திறன்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தனக்கே உரிய தனிச்சிறப்புடையவர்கள் என்று ஊக்குவித்ததோடு, நிலையான எதிர்காலத்திற்காக புதுமைச் சிந்தனைகளை வளர்க்கவும் கண்டுபிடிப்புகளை உருவாக்கவும், சவால்களைத் தீர்க்கும் ஆற்றலும் ஆர்வமும் பெறவும் அவர்களை வலியுறுத்தினார்.
சிறப்பாகப் பங்களித்த நூர் சையது மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஹேக்கத்தானில் முதலிடம் பெற்றது.
