பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 2540 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரி தலைவர் நந்தினி வழிகாட்டுதலிலும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. செயலாளர் யேசோதா தேவி, முதல்வர் ஹாரதி, இயக்குநர்கள், டீன்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதல் அமர்வில் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் ஜெனரல் மற்றும் டி.எஸ்.ஐ.ஆர் செயலாளர் கலைச்செல்வி பேசுகையில்: பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களாக மாற வேண்டும். இந்தியாவின் இளைஞர் பலத்தைப் பயன்படுத்துவதில் தரமும் அளவும் முக்கியம். பூமிக்கும் அதற்கு அப்பாலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது பட்டதாரிகளின் கடமை என பேசினார்.

2வது அமர்வில், சென்னை ஐ.சி.டி அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் வெங்கட்ராமன், கல்வி நிறுவனத்தின் நல்லபெயரையும், மாணவர்களுக்கு திறன்களை அளிப்பதில் ஐசிடி அகாடமியின் முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

3ம் அமர்வில் இந்திய அரசின் தேசிய நிபுணர் ஆலோசனைக் குழுவின் தலைவர் ரமணன் பேசுகையில்: ஒரு பெண் கல்வி கற்றால் முழு சமுதாயமே உயர்வடையும்.பெண்களின் பல்துறை வலிமையை சீதை, காளி, துர்கை போன்ற தெய்வங்களோடு ஒப்பிட்டார்.

4ம் அமர்வில் தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் முகமது ரிஹான் பேசுகையில்: பட்டதாரிகள் பொறுப்புள்ள குடிமக்களாக இருந்து, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பங்களிப்பு செய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் பகுப்பாய்வு திறனை வளர்க்க அறிவுறுத்தினார்.