கோவையில் கலஷா நுண் நகைகள், தனித்துவமிக்க, ஆடம்பரமிக்க கைவினை நகைகளின் கண்காட்சியை நடத்தி வருகிறது. அடுத்து வரும் விழாக்கள், திருமண விழா நாட்களை முன்னிட்டு இரண்டு நாட்கள் இந்த கண்காட்சி கோவை ரெசிடென்ஸி ஓட்டலில் டிசம்பர் 19, 20 ஆகிய நாட்களில் நடக்கிறது. அனைத்து வகையான வடிவமைப்புகளில், தங்கம், வைரம், ஜடாவு வகை மற்றும் ஆடம்பரமான நகைகள் இடம் பெறுகின்றன.