ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பில் உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, ‘சர்க்கரைக்கு இனி அக்கறை காட்டுவோம்’ என்ற விழிப்புணர்வு கண்காட்சி, ஜி.கே.என்.எம் வெளி நோயாளிகள் மையத்தில் வெள்ளிகிழமை நடைபெற்றது.

2 2 2

சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவ சேவைகளின் இணை இயக்குநர் டாக்டர் சுமதி கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்வில் மருத்துவமனையின் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரும், நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான சீனிவாசன், சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரும், கால் பராமரிப்பு ஆலோசகருமான முத்துலட்சுமி, கண் மருத்துவ ஆலோசகர் ஹரிப்ரியா, ஐஓபி மருத்துவ இயக்குநர் ராகவேந்திரா, ரெசிடென்ட் மெடிக்கல் ஆபிசர் சுந்தர ராஜன், மாற்று மருத்துவ ஆலோசகர்கள் சுப்பிரமணிய காந்தி, பிரியதர்ஷினி மற்றும் பிசியோதெரபி துறை தலைவர் மகேஷ் மித்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

3 2 1