கோவையில் நாளை (ஆகஸ்ட் 29) விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குனியமுத்துார் தர்மராஜா கோவிலில் இருந்து, நாளை மதியம் 1 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் தொடங்கி, பாலக்காடு சாலை வழியாக குனியமுத்துார் குளத்தில் கரைக்கப்படுகிறது. அதேபோல் மதியம் 2 மணிக்கு போத்தனுார் சாரதா மில் ரோடு, சங்கம் வீதியில் புறப்பட்டு, பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை காலை 8 முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள், லாரிகள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சாலை – உக்கடம்
- பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள், பேருந்துகள், எல் அண்டு டி பைபாஸ், ஈச்சனாரி சர்வீஸ் சாலை வழியாக வந்து, ஈச்சனாரி விநாயகர் கோவில் முன் திரும்பி, செட்டிபாளையம் சாலை வழியாக, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனுார் கடை வீதி சென்றடைந்து, நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் ராமநாதபுரம் வழியாக செல்லலாம். அல்லது குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் செல்லலாம்.
- பொள்ளாச்சி சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரும் இலகு ரக வாகனங்கள், ஈச்சனாரி, எல்.ஐ.சி காலனி சந்திப்பு, தக்காளி மார்க்கெட்டில் வலதுபுறம் திரும்பி, சாரதா மில் சாலை, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனுார் கடை வீதியை அடைந்து, நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் ராமநாதபுரம் வழியாகவும், குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் செல்லலாம்.
- மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக, உக்கடம் வரும் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள் காமராஜபுரம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, எல்.ஐ.சி காலனி, தக்காளி மார்க்கெட் ரோடு வழியாக, சாரதா மில் சாலை ரயில் கல்யாண மண்டபம், போத்தனுார் கடை வீதி வழியாக நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம் வழியாகவும் மற்றும் குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாகவும் உக்கடம் செல்லலாம்.
உக்கடம் – பொள்ளாச்சி
- உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவில் இடதுபுறமாக திரும்பி போத்தனுார் சாலை, போத்தனுார் கடை வீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, செட்டிபாளையம் ரோடு, ஈச்சனாரி சென்று பொள்ளாச்சி சாலையை அடையலாம்.
- உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் இலகுரக வாகனங்கள் ஆத்துப்பாலம், குறிச்சி பிரிவு, போத்தனுார் சாலை, போத்தனுார் கடை வீதி, ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பில் வலது புறமாக திரும்பி, சாரதா மில் சாலை வழியாக பொள்ளாச்சி சாலையை அடையலாம்.
உக்கடம் – பாலக்காடு
- உக்கடத்தில் இருந்து குனியமுத்துார் வழியாக, பாலக்காடு நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், உக்கடம் – பேரூர் பைபாஸ் வழியாக அசோக் நகர் ரவுண்டானா, செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியின் இடது புறமாக திரும்பி சிவாலயா சந்திப்பு, பேரூர், சுண்டக்காமுத்துார், கோவைப்புதுார் ரோடு வழியாக, பாலக்காடு நோக்கிச் செல்லலாம்.
- உக்கடத்தில் இருந்து குனியமுத்துார் வழியாக, பாலக்காடு நோக்கிச் செல்லும் இலகுரக வாகனங்கள், உக்கடம் பேரூர் பைபாஸ் சாலை வழியாக அசோக் நகர் ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி, புட்டுவிக்கி ரோடு வழியாக சேத்துமா வாய்க்கால், ஆஸ்ரம் பள்ளி, கோவைப்புதூர் பிரிவு வழியாக பாலக்காடு நோக்கிச் செல்லலாம்.
பாலக்காடு சாலை – உக்கடம்
- பாலக்காடு சாலையில் இருந்து, உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனம் மற்றும் பேருந்துகள் பாலக்காடு ரோடு, கோவைப்புதுார் பிரிவில் இடது புறம் திரும்பி, கோவைப்புதுார், ஆஸ்ரம் பள்ளி, புட்டுவிக்கி, சேத்துமா வாய்க்கால், சிவாலயா சந்திப்பு அடைந்து செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ், உக்கடம் ஐந்து முனை சந்திப்பு அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
- பாலக்காடு சாலையில் இருந்து, உக்கடம் நோக்கி வரும் இலகுரக வாகனங்கள், கோவைப்புதுார் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கோவைப்புதுார் ஆஸ்ரம் பள்ளி சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி சுண்ணாம்பு காளவாய், சேத்துமாவாய்க்கால் செக்போஸ்ட் வலதுபுறம் திரும்பி, அசோக் நகர் ரவுண்டானா சந்திப்பை அடைந்து, உக்கடம் பேரூர் பைபாஸ் வழியாக உக்கடம் வரலாம்.
