வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உன்னத் பாரத் அபியான் சார்பாக கிணத்துக்கடவில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மக்களிடையே கண் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கண் தொடர்பான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

இந்த முகாமில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நவீன் குமார், இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், பொள்ளாச்சி கண் அறக்கட்டளை அதிகாரி பாலமுரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.