கோவை மாநகர் மாவட்ட திமுக, சிங்காநல்லூர் பகுதி -1 திமுக, கன்னிகா அறக்கட்டளை,கோயம்புத்தூர் மசாணி, பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில், ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர், நெசவாளர் காலனி ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் தொடங்கி வைத்தார்.
சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்எம் சாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சாந்தா மணி பன்னீர்செல்வம், சிங்காநல்லூர் பகுதி -1 துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், 57 வது வார்டு செயலாளர் ப.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பகுதி அவைத் தலைவர் என்.டி.சின்னச்சாமி,வட்டக் கழகச் செயலாளர்கள் ராஜேந்திரன்,த.சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் என்.ராஜேந்திரன், தலைமைக் கழகப் பேச்சாளர் சிங்கை சௌந்தர்,மகளிர் தொண்டர் அணி என்.வேலுமணி,கன்னிகா அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.