கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச இருதய ஆலோசனை முகாம் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக நிர்வாகம் கூறியதாவது: கே.எம்.சி.ஹெச்  ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் எந்தவொரு இருதயம் தொடர்பான பிரச்சினை என்றாலும் அதற்கு உடனடியாகவும், சிறந்த முறையிலும் சிகிச்சைகள் அளித்திடத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது.

இங்கு இருதயம், இருதய அறுவை சிகிச்சை, இருதய மின் செயல்பாடு, இருதய சிகிச்சை மயக்க மருந்து, தீவிர சிகிச்சை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் ஒருங்கிணைந்த இருதய மருத்துவ சேவைகளை அளிக்கின்றனர். அனைத்து வகையான இருதய நோய்களுக்கும் உலகத் தரத்திற்கு இணையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான பிரத்தியேக அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவு அதிக படுக்கை வசதியுடன் உள்ளது. இதில் குழந்தைகள் இருதய மருத்துவ ஆலோசகர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், பயிற்சி பெற்ற செவிலியர் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழு ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் மற்றும் அக்கறையுடன் சிகிச்சை அளிக்கிறது.

இருதய நோய்களால் பாதிப்படைந்த குழந்தைகளின் நலன் கருதி அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை வளாகத்தில் ஆகஸ்ட்  2ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.

கே.எம்.சி.ஹெச் குழந்தைகளுக்கான சிறப்பு இருதய  மருத்துவத் துறையில் திறமையும் அனுபவமும் வாய்ந்த மருத்துவர்  டாக்டர் வினோத் துரைசாமி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் சிக்கலான இருதய கோளாறுகள் உட்பட 13500-க்கும் மேலான இருதய அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை புரிந்துள்ள இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் மூர்த்தி இம்முகாமில் கலந்துகொண்டு தேவையான ஆலோசனைகள் வழங்குவர்.

உங்கள் குழந்தைகளுக்கு பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் தாமதிக்காமல் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள்: சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி நுரையீரல் தொற்று, உடல் எடை அதிகரிக்காமல் இருப்பது, ஏற்கனவே இருதய சிகிச்சை செய்தது, தோல் நீல நிறமாக மாறுவது, விளையாடும்போது சோர்வு, குடும்பத்தில் யாருக்கக்கேனும் இருதய நோய், மரபணுக் குறைபாடு, பிறவி இருதய கோளாறு முதலானவை.

இதில் பங்கேற்போர் இலவச மருத்துவ ஆலோசனை தவிர பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் பெற்றுப் பலனடையலாம். மேலும் விபரங்களுக்கும் முன்பதிவுக்கும் தொடர்புகொள்ளவும்: 87548 87568