கோவை அரசூரில் இந்தோ ஸ்டேட்ஸ் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கு இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் கணியூர், கருமத்தம்பட்டி, சூலூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். டாக்டர் ராஜகோபால் மற்றும் ஆர்டர் பவுண்டேஷன் பங்களிப்புடன் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

முகாமில் இந்தோ ஸ்டேட்ஸ் மருத்துவ மையத்தின் தலைவர் ரங்கசாமி, மேலாண்மை இயக்குனர் விஜயலட்சுமி, மருத்துவ மையத்தின் மேலாளர் ஐயப்பன், அரசூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், டாக்டர் வாணி மோகன், தலைமை மருத்துவ அதிகாரி லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
