இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்பதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட் அமைப்பு) தலைவர் ஜேம்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு 2026 பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிலையில் இன்று தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது நிச்சயமாக வரவேற்கப்படவேண்டியது என அவர் கூறினார்.

மத்திய அரசு குறு சிறு தொழிலுக்கு தந்து கொண்டிருந்த மானியத்தை நிறுத்திய சூழ்நிலையில் தமிழக அரசு குறு சிறு தொழில் முனைவோர்கள் கொள்முதல் செய்யும் இயந்திரங்களுக்கு 25% முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்குவதுடன் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும் அதிக பட்சமாக  மானியங்கள் வழங்கியும் தொழில் ஊக்கப்படுத்தி வருவதற்காக இந்த பட்ஜெட்டில் இந்த அளவு நிதி ஒதுக்கி உள்ளது வரவேற்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.