ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீ தற்காப்பு மற்றும் அவசரநிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரத்தினம் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் மாணிக்கம், கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைத் துறை சார்பில் சுரேஷ் தலைமையில், லஷ்மிகாந்தன், பாலமுருகன், நவநீதபாண்டியன், அருண்குமார், சபரிநாத் ஆகிய தீயணைப்பு வீரர்கள் பல்வேறு அவசரநிலை தீ விபத்துகளை சமாளிக்கும் முறைகளை செய்முறை விளக்கத்துடன் காட்சிப்படுத்தினர்.
மாணவர்களுக்கு பட்டாசு தீ விபத்துகள், எல்.பி.ஜி. கசிவு, சமையல் எண்ணெய் தீ போன்றவற்றை எவ்வாறு பாதுகாப்பாக சமாளிக்கலாம் என்பதற்கான நடைமுறை பயிற்சிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஞானசேகர், சரவணக்குமார், சௌந்தர்யா ஒருங்கிணைத்தனர்.
