கோவை வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை இணைந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தீயணைப்பு மற்றும் அவசரகால பாதுகாப்பு பயிற்சி பயிற்சி அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரின் முதல்வர் சௌந்தர்ராஜன் தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணித்துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் ஜெகதீஷ் சந்திர போஸ் தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு மீட்பு வாகனம் கொண்டு பல்வேறு தீ பாதுகாப்பு வழிமுறைகளை செயல்விளக்கம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் தீ விபத்துகளை குறைக்க வீடுகள் மற்றும் பணியிடங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி விளக்கப்பட்டது. அவசர நேரத்தில் தீயை அணைக்கும் கருவிகளைக் கையாள்வது குறித்து மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு செயல்விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட தலைவர் முனைவர் கேசவசாமி செய்திருந்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மாரிசேகர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் முனைவர் ஷீஜா மற்றும் ஜெயபிரகாஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.