மாணவர்களையும், நிபுணர்களையும் ஒன்றிணைத்து சமூக சவால்களை எதிர்கொள்ளும் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இ.பி.ஜி., சார்பில் நடத்தப்படும் சமூக நவீனமைப்பு மாநாடு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் 26.10.2024 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய இ.பி.ஜி., அறக்கட்டளையின் தலைவர் பாலகுருசாமி, ‘இந்த மாநாட்டில் பெண்கள் இன்று சமுதாயத்தில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் மாநாட்டில், நவீனமயமாக்கள் , விவாதம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை மூலம் பெண்கள் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனை தலைவர்கள் அனைவருக்கும், பெண்களை அதிகாரமூட்டுவதற்கான தீர்வுகளை உருவாக்க ஒன்றிணைந்து வேலை செய்வதற்கான தனித்துவமான வாய்ப்பை இம்மாநாடு வழங்கும்’ என்றார்.
இந்திய குறியீட்டு போட்டி
பெண்களை அதிகாரமூட்டல் மற்றும் சமூகம் வளரும் என்ற தலைப்பில் மாணவர்கள் சமர்பித்த தீர்வுகளுக்கு முதல் பரிசு ரூ.25,000, இரண்டாம் பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000. என ரொக்கப்பரிசு பெற உள்ளனர்