கோவையில் கல்லூரி மாணவிகளுக்கான தொழில்முனைவு தயாரிப்பு திட்டமான ‘நிபுணி கரியர் பாத்திங்’ நிகழ்ச்சியை அவ்தார் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக விழா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கோவை பாஷ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் செல்வராணி மயில்சாமி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 10 அரசு பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் பேசுகையில்: பெண் மாணவர்கள் பல்வேறு தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கான சிறந்த தளத்தை உருவாக்குகிறது. இது லட்சியம் விழிப்புணர்வை சந்திக்கும் இடமாகவும் உள்ளது. முதல் தலைமுறை கற்பவர்கள் என பல மாணவர்களுக்கு, தொழில் நோக்கத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் தொழில்முறை எதிர்காலத்தை ஒன்றிணைந்து செயல்படுத்த இம்மாநாடு உதவுகிறது எனக் கூறினார்.
அவதார் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில்: இளம்பெண்கள் சரியான சுற்றுச்சூழல் அமைப்பை அணுகும்போது அர்த்தமுள்ள தொழில்களைத் தொடர ஆழ்ந்த உந்துதல் பெறுகிறார்கள். நிபுணி கரியர் பாத்திங் திட்டம் தகவல் தொடர்பு, தலைமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், திட்ட மேலாண்மை ஆகியவற்றில் முக்கியமான திறன்களை வழங்கும் என்றார்.
