தங்க நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் மூலமாக, குருடம்பாளையம் ஊராட்சிக்கு ரூ. 8 லட்சம் மதிப்பிலான டிராக்டர் வழங்கப்பட்டது.
இதை நிறுவனத்தின் இயக்குனர் விஷ்ணு பிரசாத், அறங்காவலர் கருணாகரன் ஆகியோர் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெர்கின், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோரிடம் சாவியை வழங்கினர்.
விழாவில் குருடம்பாளையம் ஊராட்சி செயல் அலுவலர் சண்முகராஜ், முன்னாள் வார்டு கவுன்சிலர் அருள்ராஜ், நிர்வாகத்தின் சார்பாக தினேஷ்குமார், சக்திவேல், ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
