டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் காரமடை நண்பர்கள் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ‌.கே. செல்வராஜ், காரமடை நகராட்சித் தலைவ உஷா வெங்கடேஷ் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். காரமடை சுற்று வட்டாரப் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவினர் ஐந்து கிலோமீட்டர் தொலைவும், ஏழு முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவும் பங்கேற்று ஓடினர். வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வயது அடிப்படையில் பதக்கங்களும், சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

காரமடை வார்டு கவுன்சிலர் சஞ்சீவ் ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா, நிர்வாக மேலாளர் மனோகரன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.  முன்னாள் நிர்வாக மேலாளர் சீனிவாசன், உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.