சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து போதைப் பொருள், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை சித்ரா முதல் நேரு நகர் வரை நடத்தியது.
இதில் போதைப் பொருள் ஒழிப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
நிகழ்வை கோவை மாநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து கல்லூரி முதல்வர் ராஜ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள், பேராசிரியர்களை கல்லுரியின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா லட்சுமி நாராயணசாமி, செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன், இயக்குனர் மற்றும் செயலர் சேகர் பாராட்டினர்.
