தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மலரியல் துறையில் வரும் மே 26 (செவ்வாய் கிழமை) அன்று ‘உலர் மலர் தொழில்நுட்பம் குறித்த திறனுக்க பயிற்சி’ ஒரு நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், அறிவியல் மாணவர்கள், புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாக, உலர் மலர் குறித்த தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
