டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் சார்பில் கல்லூரி வளாகத்தில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

2 14

டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி தலைமையேற்று விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அலுவலர் புவனேஸ்வரன், தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் நடேசன், முதல்வர் சரவணன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 11 scaled

ஒவ்வொரு துறை சார்பிலும் பொங்கல் வழிபாட்டு நிகழ்வுகள், தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்துத் துறைகளையும் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

6 2

நிகழ்வின் நிறைவில் மாணவர்கள் பாரம்பரிய நடனங்களை நிகழ்த்தினர். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

7 1 scaled