திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு சுற்றுப்புறச் சூழல், ரத்ததானம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி மசக்காளிபாளையம் சாலை, பாலன் நகர் வளைவு அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, 4 கி.மீ, 6 கி.மீ, 10 கிமீ, ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டி நடந்தது. மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.