கோவை, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (13.11.2024) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச ஆகியோர் கலந்துகொண்டனர்.