ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு மாணவரான என்சிசி கேடட் சார்ஜென்ட் ஆயுஷ், கோயம்புத்தூர் குழுமத்தின் 2 (டிஎன்) பேட்டரி என்சிசி யூனிட்டின் கீழ் பயிற்சி பெற்று தேசிய கேடட் கார்ப்ஸில் (ஆர்மி விங் – எஸ்டி & எஸ்டபிள்யூ) போட்டிகளில் கலந்து கொண்டார்.
சுமார் நூறு நாட்கள் பல்வேறு பிரிவுகளில் கடுமையான பயிற்சி கொண்டு தமிழ்நாடு இயக்குனரக அளவில், சிறந்த கேடட் பிரிவில் குழுவிற்கு இடையேயான போட்டி மற்றும் ஆர்.டி.சி இரண்டாயிரத்தி இருபத்தி ஆறு குழுவிற்கு தகுதி பெற்று வெள்ளி பதக்கம் வென்றார்.
ஜனவரி மாதம் புது தில்லியில் நடைபெற்ற பிரதமரின் குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றார். அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம், முன்மாதிரியான செயல் திறனுக்காக தங்கப்பதக்கம் வென்றார். இந்த சாதனையை பாராட்டி லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வட்ஸ், மதிப்புமிக்க இயக்குனர் ஜெனரல் கமெண்டேஷன் விருது வழங்கினார்.
மேலும் இக்கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங் துறையில் பயின்ற முன்னாள் மாணவர் என்சிசி கேடட் ஷர்மில் குமார், அலகாபாத்தில் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நேர்காணலில் நடைபெற்ற எஸ்.எஸ்.சி டெக்னிக்கல் கேடர் மூலம் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ரேங்கின் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சாதனை புரிந்த இருவரையும், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன், என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் ரமேஷ் ஆகியோர் பாராட்டினர்.
