கோவை சத்தி ரோடு, ராமகிருஷ்ணாபுரம் ஜெம் வளாகத்தில் தார்மிக் ஹெல்த் மற்றும் பியூட்டி சூப்பர் மார்கெட் இன்று திறக்கப்பட்டது. இதனை பிரிக்கால் லிமிடெட் தலைவர் வனிதா மோகன் திறந்து வைத்தார்.

முதல் விற்பனையை இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் தொடங்கி வைத்தார். செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். தார்மிக் குரூப்ஸ் நிறுவனர் தனுஷ்கரண் இதில் கலந்துகொண்டார்.

10 3 8 4

சிறப்பு விருந்தினர்களாக சக்தி பல் மருத்துவமனை டாக்டர் கார்த்திக், வழக்கறிஞர் சந்திரசேகரன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சீனியர் மேனேஜர் பூபேந்திரநாத், பிரேம் துரை, ஸ்கை சுந்தரராஜன், பல்லடம் செந்தில் அக்ஸசரீஸ் துரைசாமி, கோவை வீனஸ் கெமிக்கல்ஸ் கதிரேசன், சினர்ஜி போர்எக்ஸ் ராமசுப்பிரமணியன், தேவி மருத்துவமனை டாக்டர் திரவியராஜ், விமல், பழனிச்சாமி, சுரபி வஜ்ரவேல், முத்துசிவன், சுந்தர் நர்சரி சுந்தரராஜன் சுகந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

2 29 5 7

இங்கு ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பாரம்பரிய அரிசி மற்றும் தானிய வகைகள், செக்கு எண்ணெய்கள், பேக்கரி பொருட்கள், வீட்டிற்கு தேவையான மளிகை, பூஜை சாமான்கள் என பல்வேறு வகையான பொருட்கள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கின்றன.