கோவை நகைச்சுவை சங்கத்தின் 29வது நிகழ்ச்சியாக, ‘ஏனுங்க வாங்க சிரிக்கலாம்’ என்ற தலைப்பில் இந்துஸ்தான் கல்லூரி அரங்கில் பேராசிரியர் நீலகண்டன் மற்றும் சதீஸ்குமார் ஆகியோரின் இடைவிடாத சிரிப்பு வெடிகள் நிகழ்ச்சி நடைபெற்றது. பி.எஸ்.ஜி தொடக்கப்பள்ளி மாணவிகள் வில்லுப்பாட்டு பாடினர்.

Nagaichuvai 2 scaled

ஹரிபவனம் ரெஸ்டாரண்ட்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநர் பாலசந்தர் ராஜூ தலைமை தாங்கினார். தி இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியன் பவுன்டரிமென் முத்துக்குமார் வாழ்த்துரை வழங்கினார். கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால் மற்றும் நிர்வாகிகள், திருப்பூர் நகைச்சுவை மன்றம், அவினாசி நகைச்சுவை மன்றத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.