கோவை மாநகராட்சியின் மத்தியம், கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட 7 வெவ்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் வியாழன்று திறந்து வைத்தார்.
மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்த திட்டங்கள்:
மத்திய மண்டலம், வார்டு எண்.68க்குட்பட்ட பொன்னே வீதி, வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25.50 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம்…
மத்திய மண்டலம், வார்டு எண்.66க்குட்பட்ட ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.99.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திறந்த வெளி வாகன நிறுத்தம்…

மத்திய மண்டலம், வார்டு எண்.83 க்குட்பட்ட சுங்கம் ரவுண்டான அருகில் தனியார் பங்களிப்புடன் (கோடக் மகேந்திரா) ரூ. 3.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடம்…
மேற்கு மண்டலம், வார்டு எண் 41க்குட்பட்ட லிங்கனூர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.25.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம்…
வார்டு எண் 37க்குட்பட்ட கல்வீரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.74.00 இலட்சம் மதிப்பீட்டில் 3.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதிதாக கட்டப்பட்டுள்ள கீழ்நிலைத்தொட்டி மற்றும் மோட்டார் அறை…
வார்டு எண் 38க்குட்பட்ட மருதமலை பகுதியில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ரூ.15.00 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது கழிப்பிடம்…
கிழக்கு மண்டலம், வார்டு எண் 9க்குட்பட்ட விளாங்குறிச்சியில் 15 வது சி.எப்.சி. திட்டத்தின் கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார மையத்திற்கு கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம் என மொத்தம் ரூ.3.38 கோடி மதிப்பீட்டில் 7 எண்ணிக்கையிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் திறந்துவைக்கப்பட்டது.
துவக்கி வைக்கப்பட்ட பணி :
மத்திய மண்டலம், வார்டு எண்.63க்குட்பட்ட திருச்சி சாலை இராமநாதபுரம் சந்திப்பு முதல் இ.எஸ்.ஐ அலுவலகம் வரையுள்ள பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.66.80 லட்சம் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பிரதான குழாய் மற்றும் தொடர்புகளை மாற்றி அமைத்தல் பணி துவக்கிவைக்கப்பட்டது.
