புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்கான நிதி திரட்டும் நோக்கிலும் கோவை மாரத்தான் நடைபெற்றது. இதில் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநா் சைலேந்திர பாபு , கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், கோயம்பத்தூர் கேன்சர் பவுண்டேசன் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.பாலாஜி, எல்.ஜி. எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ஜெயராம் வரதராஜ், வாக்கரூ இயக்குநர் ராஜேஷ் குரியன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.