கோவையில் இருந்து உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கோவையில் இருந்து டிசம்பா் 24ம் தேதி காலை 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06043) டிசம்பா் 27ம் தேதி இரவு 12 மணிக்கு ஹரித்வாா் நிலையத்தை சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ஹரித்வாரில் இருந்து டிசம்பா் 30ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06044) ஜனவரி 2ம் தேதி காலை 4 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, பாலக்காடு, ஷொரணூா், கோழிக்கோடு, கண்ணூா், மங்களூரு, உடுப்பி, ரத்னகிரி, ரோஹா, வதோரா, கோடா, மதுரா, ஹஸ்ரத் நிஜாமுதீன் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
