காரைக்குடியில் அகில இந்திய மருத்துவ சங்கத் தமிழ்நாடு கிளையின் சார்பில் 80வது மாநாடு நடைபெற்றது. இதில் கோவை ராம்நகர், நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு தமிழ்நாடு மாநில விருது வழங்கப்பட்டது.

இந்த விருது சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது. விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் டாக்டர் செங்கூட்டுவன் மற்றும் செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் வழங்கினர்.