கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் பொங்கல் 2026–ஐ முன்னிட்டு 30% சிறப்புத் தள்ளுபடி விற்பனை கடந்த டிசம்பர் 1 முதல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்ததாவது: 90 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனை, நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

இந்தத் தள்ளுபடி விற்பனைக்காக பல வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டுச்சேலைகள், மென்பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்திச் சேலைகள், காஞ்சி காட்டன், பரமக்குடி காட்டன், சுங்குடிச் சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான லினன், ரிங்கிள் ஃப்ரீ மற்றும் ஸ்லிம் ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவழைக்கப்பட்டுள்ளன.

வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும். மாதாந்திர சேமிப்புத் திட்டம் ரூ.300 முதல் தொடங்குகிறது. இதில் 11 மாத சந்தாத் தொகையை செலுத்தினால், 12-வது மாத சந்தாத் தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வ.உ.சி. பார்க் பகுதியில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்தில் “பழசுக்கு புதுசு” சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப்புடவைகளை மாற்றி, அதற்கான மதிப்பில் புதிய துணிகளை பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையம், நேரு ஸ்டேடியம், கோவை மற்றும் ஸ்ரீபாலமுருகன் சாய்பாபா காலனி விற்பனை நிலையங்களில் 40% முதல் 80% வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு முதுநிலை மண்டல மேலாளர் அம்சவேணி தெரிவித்தார்.